ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து ரவுடிகள், வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் என 17 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், தற்போது பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிரதீப் ஆற்காடு சுரேஷின் உறவினர் என கூறப்படுகிறது. இவ்வழக்கில் இதுவரை பிரதீப்புடன் சேர்த்து 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.