ஆயுளை அதிகாரிக்கும் சனிக்கிழமை விரதம்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

நவகிரகங்களில் சனி பகவானை ஆயுள்காரன் என்று சொல்வார்கள். சனியின்  ஆதிக்கத்தை பொறுத்து தான் ஒருவரின் ஆயுள் காலத்தை நிர்ணயிக்க முடியும். ஆனால் அந்த கிரகத்தையும் கட்டுப்படுத்துபவர் பெருமாள். சனிக்கு அதிபதியான பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட உகந்த நாட்கள்.

சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து குளித்து முடித்த பின்னர் நெற்றியில் திருநாமம் தரித்து ஓம் நமோ நாராயண என்று உச்சரித்து விரதத்தை ஆரம்பிக்கலாம். அன்றைய தினம் முழுவதும் உணவு அருந்தாமல் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது. மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது அவசியம்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்துவிட்டு பெருமாளை வணங்கிய பின்பு எப்போதும் போல உணவை உண்ணலாம்.

அருகில் கோவில் இல்லாதவர்கள் வீட்டிலேயே பெருமாளை படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர்ந்து விரதம் கடைபிடித்து வந்தால் சனி பகவானின் முழு அருளும் கிடைக்க பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை வழங்குவார்.

புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை. இதுவரை விரதம் இருக்காதவர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் அனுஷ்டித்தால் சகல செல்வமும் பெற்று வாழலாம். இப்படி விரதம் இருப்பதன் மூலம் சனி கிரகத்தில் ஆதிக்கத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும். ஜாதகத்தில் சனியினால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ள சனிக்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும்.

Read Previous

சிவகங்கையில் பெண்கள் கபடி போட்டி..!! 12 மாநிலங்கள் பங்கேற்பு..!!

Read Next

கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி?.. நல்ல ஆலோசனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular