புனேவிலுள்ள நீர் வீழ்ச்சியில் குதித்து நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இந்நிலையில் அடித்த செல்லப்பட்ட இளைஞரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகின்றது, இதனால் வட மாநிலங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுத்து நீர் ஓடுகிறது. வடமாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக அதிக கன மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் பூனேவில் உள்ள சின்சவாட் பகுதியை சார்ந்த இளைஞர் ஒருவர் தம்சினி கார்ட் என்ற பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சியில் குதித்து நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் அடித்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த இளைஞர் தனது ஜிம்மில் இருந்து 32 பேருடன் சேர்ந்து நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வந்ததாக கூறப்படுகின்றது இந்நிலையில் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருக்கும் போது இளைஞர் திடீரென்று அடித்து செல்லப்பட்டுள்ளார் .இரண்டு நாட்களாகியும் இளைஞர் உடல் இதுவரை கண்டறியப்படவில்லை என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருக்கும் போது இளைஞன் அடித்து செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.