
திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள மேட்டுப்பட்டியில் இருந்து ஒட்டணம் பட்டி செல்லும் சாலையில் உள்ள டிவைன் நகர் பகுதியை சேர்ந்தவர் தான் வினோத். இவரது மனைவி மஞ்சுளா .இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் சுள்ளான் என்பவரை கடந்த 2020 ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். மேலும் திண்டுக்கல்லில் இருந்தால் எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்து திருப்பூரில் வசித்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூர் அழைத்து செல்வதற்காக தனது வீட்டிற்கு வந்திருக்கிறார். வினோத் நேற்று இரவு தனது வீட்டில் தாய் அக்காவுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில், அப்போது அடையாளம் தெரியாத மூன்றும் பேர் கொண்ட நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து, தாய் கண்முன்னே வினோத்தை வெட்டி படுகொலை செய்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார், அவர்கள் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொலை நடந்த இடத்தில் காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். முன்தினம் வேடப்பட்டி பகுதியில் கூலி தொழிலாளி பாண்டி என்பவர் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் அச்சத்தில் இருந்த பொது மக்களை தற்போது 48 மணி நேரத்தில் மேட்டுப்பட்டி பகுதியில் வினோத்குமார் என்பவர் வீடு புகுந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.