
இதயத்தையும் ரத்தக்குழாய்களையும் பாதுகாக்க கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!!
நம்முடைய உடல் உறுப்பில் மிக முக்கியமான ஒன்றுதான் இதயம். இதயம் நின்று விட்டால் அவ்வளவுதான். இந்நிலையில் அவ்வளவு அற்புதமான இதயத்தை எவ்வாறு ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கேரட் சாறு குடித்தால் இதயத்திற்கும் மிகவும் நல்லது இதில் இருக்கும் கரோட்டின் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தினமும் காலையில் 6 சின்ன வெங்காயம் ஒரு பூண்டு சேர்த்து சிறிது எண்ணெய் விட்டு வதக்கி சாப்பிடுவதன் மூலம் இதயத்தையும் இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களையும் ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும். தேனில் ஊறிய பேரிச்சம்பழம் இதயம் வலிமை பெற உதவுகிறது. இதய தமணியை அடைப்புகள் இன்றி காயத்திட கேரட் மற்றும் கொள்ளு ரசம் சிறந்தது. முருங்கைக்கீரை சாற்றை சூப்பாக செய்து வாரம் ஒரு முறை அருந்துதல் உடலுக்கு நல்ல பலனை தரும். 100 மில்லி பாலில் 25 g பூண்டு தட்டி போட்டு வேகவைத்து அருந்துவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். செம்பருத்தி பூ மற்றும் வெள்ளை தாமரை இதழ்களுடன் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பனைவெல்லம் சேர்த்து அருந்துவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.