நம் அனைவரது வீட்டிலும் நம் உரிமை இன்றி வாழும் உயிரினம் என்றால் அது பல்லி தான். அதிகமான பல்லி நம் வீட்டில் தங்குவதால் சுகாதார கேடுக்கு வழிவகுக்கும். மேலும், பல்லிகள் அதிகமான விஷத்தன்மை கொண்ட ஓர் உயிரினம் என்பதால் இந்தப் பதிவில் பல்லிகளை எப்படி நம் வீட்டில் இருந்து துன்புறுத்தாமல் விரட்டுவது என்பதை பார்ப்போம்.
அதாவது, பல்லிகளுக்கு ஆகாத ஒன்று என்றால் அது முட்டை ஓடு தான். ஏனென்றால் முட்டை ஓட்டில் இருந்து வரும் வாசனை பல்லிகளை நோய்வாய்ப்படுத்தும். இதனால் வீட்டின் குப்பை தொட்டிகள், பாத்ரூம், கிச்சன்களில் இந்த முட்டை ஓட்டை ஓரத்தில் வைப்பதால் பல்லி நம் வீட்டில் இருந்து தப்பி ஓடுகிறது. மேலும் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயத்தையும் இதற்கு மாறாக பயன்படுத்தலாம். இதேப்போல் நாப்தலின் உருண்டைகளையும் பல்லிகள் அதிகமாக இருக்கும் இடங்களில் வைப்பதன் மூலம் பல்லிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.




