
ஐசிசி சார்பாக 4 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது 9 வது சீசனை எதிர்நோக்கி உள்ளது. இந்த 9வது சீசனானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. தற்போது இத்தொடர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி (CT) போட்டியில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா அறிவித்து விட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ICC நிர்வாகம் ஹைபிரிட் போட்டி ஆலோசனை அளித்துள்ளது. அதில், இந்தியா பங்கேற்கும் போட்டி, இறுதி போட்டியை வேறு நாட்டில் நடத்த யோசனை தெரிவித்துள்ளது. இதை பாகிஸ்தான் ஏற்கவில்லையேல் இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்த ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.