பாரிஸ் ஒலிம்பக்கில் மல்யுத்தப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 29 வயதான அவர் இளம் வயதிலேயே மல்யுத்தம் பயின்றார். தனது 19 வது வயதில் யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார். 2023-ல் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் ஷரன் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை முன்மொழிந்தவர்களில் போகத்தும் ஒருவர்.