தற்சமயம் கொல்கத்தாவில் நடந்த பெண் மருத்துவரின் பாலியல் கொலை சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரான சூர்யக்குமார் யாதவ் தனது கருத்தை ஆழமாக முன் வைத்துள்ளார்.
அதில் பெண் குழந்தைகளை பாதுகாக்க இருக்க வேண்டும் என்று சொல்வதை நிறுத்திவிட்டு, ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை எப்படி மதிக்கவும், அவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லித் தாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார், கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்திய நிலையில் பும்ரா, ஷமி, முகமது சிராஜ் என பலரும் தங்களின் கருத்துக்களை ஆக்ரோஷமாக இணையதள பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்..!!