T20 உலக கோப்பை தொடரை இந்திய அணி தன்வசப்படுத்தியதை நாம் அறிவோம். நடப்பு T20 உலக கோப்பை தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பரிசு தொகையாக ரூ.20.42 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிசிசிஐ நிர்வாகம் இந்திய அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.125 கோடியை அறிவித்தது. இந்நிலையில் பிசிசிஐ அளித்த பரிசுத்தொகையில் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், தேர்வுக் குழு உறுப்பினர்கள், ரிசர்வ் வீரர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் எவ்வளவு தொகை அளிக்கப்படும் என்பது தெரிய வந்துள்ளது.
இந்திய அணிக்கான பரிசுத் தொகைப் பிரிவு :
- அனைத்து 15 வீரர்களும், தலா 5 கோடி பெறுவார்கள்
- ராகுல் டிராவிட் 2.5 கோடி பெறுவார்.
- மீதமுள்ள பயிற்சி குழுவுக்கு தலா 2.5 கோடி
- பேக்ரூம் ஊழியர்களுக்கு தலா 2 கோடி
- தேர்வுக் குழுவுக்கு தலா 1 கோடி
- ரிசர்வ் வீரர்களுக்கு தலா 1 கோடி