
இந்த காய்கறிகளுடன் ஒருபோதும் தக்காளி சேர்க்கக்கூடாது..!! ஏன் தெரியுமா..??
தக்காளியை ஒரு சில காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க கூடாது அது என்ன காய்கறி ஏன் சமைக்க கூடாது என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
தக்காளியை பூசணிக்கையுடன் சேர்த்து சமைக்கக்கூடாது. ஏனென்றால் பூசணியில் இனிப்பு மற்றும் புளிப்பு தன்மை இருக்கும் தக்காளி சேர்த்தால் அது பூசணிக்காயின் உணவு பண்புகளை மாற்றிவிடும். இதனால் பூசணியுடன் ஒருபோதும் தக்காளி சேர்த்து சமைக்காதீர்கள். பாகற்காயுடன் தக்காளி சேர்த்து சமைக்க கூடாது. ஏனென்றால் தக்காளி சேர்த்தால் பாகற்காய் சரியாக வேகாது மேலும் உணவு ஒட்டும் தன்மையுடன் இருக்கும். இதனால் பாகற்காயுடன் தக்காளி சேர்க்கக்கூடாது.
வெண்டைக்காய் இயற்கையாகவே வளவளப்பு தன்மை கொண்டது. இந்நிலையில் அதனுடன் தக்காளி சேர்த்தால் அது இன்னும் அதிகமாக ஒட்டி விடும் மேலும் தக்காளியின் புளிப்பு தன்மை வெண்டைக்காயின் இயல்பான சுவையை மாற்றி விடுவதால் தக்காளி சேர்க்கக்கூடாது. அதே போன்று கீரை சமைக்கும்போதும் தக்காளி சேர்க்கக்கூடாது. கீரை நீர் சத்தானது அதனுடன் தக்காளி சேர்த்தால் அதன் சுவை மாறிவிடும். உணவின் சுவையை சரியாக கொண்டு வர கண்டிப்பாக இதை பாலோ பண்ணுங்க.