இந்த தோசையை சாப்பிட்டால் வாய்ப்புண் சரியாகும்..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

நமது உடலுக்கு கீரை வகைகளை அவ்வப்போது சேர்த்துக் கொள்வது மிகவும் ஆரோக்கியமான விஷயமாகும். அப்படி உங்களுக்கு வாய்ப்புண் இருந்தால் அதற்கு மிகச் சிறந்த மருந்தாக இருக்கும் பசலை கீரையை வைத்து தோசை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம். இது நமது உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் உற்பத்தியையும் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – 300 கிராம்,
பசலைக்கீரை – 1 கட்டு,
பெரிய வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 2,
உப்பு & எண்ணெய் – தேவையான அளவு..

செய்முறை:

வெங்காயம் பச்சை மிளகாய் பசலை கீரை ஆகியவற்றை சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி கீரையை சேர்த்து நன்றாக வதக்கி மாவில் சேர்த்துக் கொள்ளவும்.

அதே கடாயை எடுத்து வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தனியாக வதக்கி மாவில் சேர்த்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். தோசை கல்லை எடுத்து அடுப்பில் வைத்து தோசை போல ஊற்றி வெந்த பிறகு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பசலை கீரை தோசை தயார்.

Read Previous

ஏலக்காய் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..??

Read Next

மஞ்சள் துணியில் இதை மட்டும் வைத்தால் போதும்..!! கோடி ரூபாய் கடனும் தீரும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular