நமது உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அதுவும் இந்த வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் உணவுகளை சாப்பிட்டால் தான் சரியாக இருக்கும். நாம் அனைவருக்கும் பிடித்தமான தயிர் சாதத்தில் இருக்கும் நன்மைகளை இந்த பதிவில் காண்போம்.
தயிர் சாதம் சாப்பிட்டு வந்தால் நமது உடலில் ஜீரண சக்தி அதிகமாகும். மேலும் எலும்புகள் பலப்படும். தயிர் சாதம் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். அதுமட்டுமில்லாமல் நமது உடல் சூட்டை குறைத்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளை அழித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
இத்தனை நன்மைகள் கொண்ட இந்த தயிர்சாதத்தை நாம் வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்யலாம். இதை பிடிக்காது என்று சொல்லும் நபர்கள் மிகவும் குறைவு. நமது உடலுக்கு ஆரோக்கியத்தை சேர்ப்பது நமது கடமை. எனவே இந்த தயிர் சாதத்தை சாப்பிட்டு ஊட்டச்சத்தை நமது உடலுக்கு சேர்ப்போம்.




