மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பதிவுத்துறையில் கணினி மயமாக்கல் என்கின்ற ஸ்டார் திட்டத்தை முன்னோடி திட்டமாக தொடங்கி வைத்தார், முதன் முதலில் 23 அலுவலகங்களில் தொடங்கப்பட்ட கணினி மயமாக்கல் திட்டம் பின்னர் படிப்படியாக அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
நிர்வாக வெளிப்படை தன்மை மற்றும் பொதுமக்களின் எளிய அணுகுமுறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த புதிய மேம்படுத்தப்பட்ட வலை அடுப்பிலான ஸ்டார் 2.0 என்கின்ற மென்பொருள் பயன்பாட்டில் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்டார் 2.0 என்ற சாப்ட்வேர் மேம்படுத்தும் வகையில் ஸ்டார் 3.0 என்கின்ற புதிய மென்பொருள் தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் இந்த மென்பொருள் செயல்பாட்டுக்கு வர உள்ளது. பதிவு துறையில் தனித்துவமான வசதிகளுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இணைய வழி பதிவை எளிமையாகும் விதமாக இந்த ஸ்டார் 3.0 என்னும் மென்பொருள் செயற்கை நுண்ணறிவை கூடுமானவரை பயன்படுத்துதல், மனித தலையீட்டின்றி தானாகவே, சேவைகளை அளித்தல், பொதுமக்கள் அலுவலகம் வராமலே சேவைகளை பெறுதல் தற்போதைய இணையதளத்தை புதுப்பித்து எளிமையாக்கள் மென்பொருளை அதிவேகமாக இயக்க வைக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது .
இந்த மென்பொருள் மூலமாக 1895 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பத்திரங்கள் டிஜிட்டல் முறைக்கு கொண்டு வரப்படும் உள்ளது. ஆகவே மக்காளினி சர்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை ஆன்லைன் மூலம் பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.