தற்போதைய காலகட்டத்தில் மக்கள் தங்களின் படிப்பு மற்றும் தொழில்களுக்காக வங்கியில் கடனைப் பெற்று பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்கின்றனர். அது தொடர்பாக தற்போது, வங்கி கடனை தள்ளுபடி செய்வதாக கேரள அரசு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரங்களை கீழே விரிவாக அறியலாம்..
கேரள மாநிலம்:
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த கோர நிலச்சரிவின் காரணமாக, அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணில் புதைந்தும், இடிபாடுகளில் சிக்கியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து, பேரிடரால் சிக்கி உயிரிழந்தோர், வீடுகள் மற்றும் அவர்களின் உடைமைகளை இழந்தோரின் வங்கி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் திரு. பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.