
தமிழகம் எங்கும் நடக்கும் ஆடிப்பெருக்கு திருநாளை முன்னிட்டு இன்று நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொல்லிமலை மலைப்பகுதியில் வல்விள் ஓரி மன்னனின் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது, இதில் 5000 மலர்கள் கண்காட்சி மற்றும் கிராமிய பாடல்கள் நாட்டியங்கள் கூத்து மற்றும் நடனம் என்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு வந்தனர்.
இந்த நிலையில் பல்வேறு பகுதியில் இருந்து வல்வில் ஓரி மன்னனுக்கு மாலை அணிவிக்க கூட்டம் கூட்டமாய் மக்கள் வந்து செல்கின்றனர், நிகழ்ச்சியில் எந்த அசம்பாவிதங்கள் இன்றி நடைபெற வேண்டும் என்று 500க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..!!