தனியார் நிறுவனம் தமிழக அரசோடு ஒப்பந்தம் வைத்து நிலையில் 25 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் உள்ளது, அதனை தொடர்ந்து செப்டம்பர் 1 இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு என்று முன்பே கூறி இருந்தபடி இன்றிலிருந்து செயல்பாட்டிற்கு வருகிறது..
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு கீழ் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது, சுங்கச்சாவடிகள் இயங்குவதற்கு தமிழகத்தில் தமிழக அரசும் ஒத்துழைப்பு தந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச் சான்றிகள் மட்டும் 5 சதவீதம் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, இதனால் ஐந்து முதல் ஏழு சதவீதம் சுங்க வரிகள் நடைமுறைக்கு வருகிறது என்றும், இதன் மூலம் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களிடம் இருந்து வாகனங்களுக்கு சுமார் ரூபாய் ஐந்து முதல் ரூபாய் 150 வரை கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் சுங்கத்துறை அறிவித்துள்ளது, இதனால் தமிழகத்தில் பல்வேறு இடத்தில் உள்ள சுங்க சாவடி யில் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் தெரிவிக்கும் வகையில் தங்களது போராட்டம் விரைவில் நடக்க இருக்கிறது என்றும் மக்கள் கூறியுள்ளனர்..!!