அக்டோபர் மாதம் 24ம் தேதி இன்று 12 ராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையும் என்பதை கீழே காணலாம். மேஷ ராசியினருக்கு எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். ரிஷப ராசியினர் இன்று வாகனங்களில் நிதானமாக செல்ல வேண்டும். மிதுன ராசியினருக்கு இன்று சகோதரர்களால் நன்மைகள் உண்டாகும். கடக ராசியினருக்கு இன்று எதிர்ப்பார்த்த பணம் கைக்கு வரும். சிம்ம ராசியினர் இன்று வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். கன்னி ராசியினர் இன்று உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
துலாம் ராசியினர் புதிய முயற்சிகள் எதுவும் தொடங்க வேண்டாம். விருச்சிக ராசியினருக்கு இன்று உறவினர்களால் நன்மை உண்டாகும். தனுஷ் ராசியினர் இன்று வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். மகர ராசியினர் இன்று பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை தொடங்குவது நல்லது. கும்ப ராசியினர் இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டும். மீன ராசியினருக்கு இன்றைய நாளில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும்.




