சில நாட்களாகவே சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் போடுவதும், ரீல்ஸ் எடுப்பதற்காகவும் காடு, மலை, கடல், பள்ளம் என்று பாராமல் தன் உயிரை பெரிதும் பொருற்படுத்தாமல் ரீல்ஸ் மோகத்தில் இன்றைய காலகட்ட இளைஞர்கள் மரணத்தை நோக்கி ஓடுகிறார்கள். மேலும் சில சில தினங்களுக்கு முன்பு ரீல்ஸ் எடுக்க முயன்ற இளைஞர் அன்வி காம்தர் (27) இன்ஸ்டா பிரபலம், இவருக்கு இரண்டு லட்சம் பாலோவர்ஸ் உள்ளார்கள்,
அனவி காம்தர் மகாராஷ்டிரா மாநிலம் ராய் காட் பகுதியில் கும்பே அறிவிக்கு சுற்றுலா சென்ற போது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் போடுவதற்காக தன்னை வீடியோ எடுத்துள்ளார், தவறுதலாக 300 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார் 6 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இன்ஸ்டா பிரபலமான அன்வி காம்தர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டார், மீட்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார் இதனைத் தொடர்ந்து, அவரின் பாலவர்ஸ் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.