இயற்கை வழிமுறையில் உடல் வெப்பத்தை குறைக்கும் மருத்துவம்..!!

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82

இயற்கை வழிமுறையில் உடல் வெப்பத்தை குறைக்கும் மருத்துவம்..!!

1)  இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும்.

2) கோடை காலத்தில் பலருக்கும் செரிமான பிரச்சனைகள் இருக்கும். இதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனாலும் கூட உடற் சூடு அதிகரிக்கும். எனவே திரிபலா லேகியம் போன்ற இயற்கை மலமிளக்கிகளை எடுத்துக் கொள்வது நல்லது.

3) நெல்லிக்காய் குளிர்ச்சியை தரக்கூடியது. எனவே கோடை காலங்களில் தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது.

4) தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடற் சூட்டை குறைக்க மிகச்சிறந்த வழியாகும். நல்லெண்ணெய் இல்லாவிட்டாலும், தினமும் தேங்காய் எண்ணையை தலையில் தேய்த்து குளிப்பது நல்லது.

5) தயிரை விட மோர் உடற்சூட்டை குறைப்பதில் சிறப்பாக செயல்படும். எனவே மதிய உணவில் மோரை சேர்த்துக் கொள்வது அவசியம்.

Read Previous

இந்தியா vs இலங்கை: இன்று முதல் ஒருநாள் போட்டி..!! எத்தனை மணிக்கு?..

Read Next

வயநாட்டில் இந்த சோகக் காட்சிகளை காணும் போது என் மனம் மிகவும் வலிக்கிறது – ராகுல் காந்தி உருக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular