தமிழகத்தில் இரண்டு புலிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 நபர்களை கைது செய்தது காவல்துறை..
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே விஷம் வைத்து 2 புலிகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, புலியின் தோல் மற்றும் பற்களை எடுப்பதற்காக காட்டுப்பன்றியின் உடலில் விஷத்தை தடவி புலிக்கு உணவாக வைத்து இதை சாப்பிட்ட புலி உயிரிழந்த சம்பவம் வனத்துறை விசாரணையில் தெரிவந்துள்ளது, இதனால் அந்த மூன்று நபர்களையும் கைது செய்து வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..!!