
இலவசமாக பட்டாணி கேட்டு தகராறு செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக ராதா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவத்தன்று அங்கு உள்ள பட்டாணி கடையில் உரிமையாளர் ராஜன் இலவசமாக பட்டாணி கேட்டுள்ளார். இதனால் கடை உரிமையாளருக்கும், சிறப்பு உதவி ஆய்வாளருக்கும் சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து வற்புறுத்தலின் பேரில் இலவசமாக பட்டாணியை சிறப்பு உதவி ஆய்வாளர் பெற்றுக் கொண்டு சென்றார்.
இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிமாக பரவியது. இது குறித்து விசாரணை நடத்திய மாநகர காவல் ஆணையர் காமினி, ஸ்ரீரங்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராதாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.