இன்றைய காலங்களில் பலரும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இளநீரை குடிக்கும் பழக்கம் உண்டு, சிலர் தோட்டம் காடு வைத்திருப்பவர்கள் காலை நேரத்திலேயே இளநீரை குடிப்பார்கள் அப்படி குடிப்பதனால் உடலுக்கு ஆரோக்கியம் என்று நினைப்பது தவறு.
அனைத்து வகையான இளநீரிலும் மருத்துவ குணம் உண்டு, இளநீர் குடிப்பதனால் உடலில் உள்ள சூடு தணியும் மேலும் வாதம், பித்தம், கபத்தை தீர்க்கக்கூடிய மிகச்சிறந்த மருந்தாக இளநீர் செயல்படுகிறது, அதனைத் தொடர்ந்து ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் இப்படி ஆரோக்கியத்தை தரும் இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதனால் புண் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், இளநீரில் உள்ள அமிலத்தன்மை வெறும் வயிற்றில் குடிப்பதனால் புண் மற்றும் எரிச்சலை உண்டு பண்ணும் முடிந்தவரை காலை உணவை எடுத்த பின்னே இளநீரை குடிப்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியம்..!!