
தற்பொழுது நம் நாட்டில் போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்கள் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தினால் போக்குவரத்து விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சாலை கட்டமைப்பை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக 18 வயதிற்கு கீழ் இருப்பவர்கள் வாகனங்களை இயக்குவது மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறாதவர்கள் தான் இது போன்ற விபத்துகள் ஏற்படுகிறது என்று ஆய்வில் கூறப்படுகிறது. இதன் காரணமாக நம் நாட்டில் வாகனம் ஓட்டு அனைவரும் கட்டாயமாக ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்பது போக்குவரத்து விதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உங்கள் ஒருவர் உரிமம் சில வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால் அவை காலாவதியாகும் தேதிக்குள் மீண்டும் புதிது புதுப்பித்துக் கொள்வது அவசியம்.
- முதலில் ஆர்டிஓ வின் அதிகாரப்பூர்வ இணையதளமான பரிவாஹன் போர்ட்டலுக்குள் செல்ல வேண்டும்.
- சர்வீசஸ் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள “டிரைவிங் லைசன்ஸ் சர்வீஸ்” என்பதை கிளிக் செய்து “தமிழ்நாடு” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து “அப்ளை ஃபார் டிஎல் ரினிவல்” என்பதை தேர்வு செய்து “கண்டினியூ” என்பதை கிளிக் செய்யவும்.
- பின்னர் உங்கள் டிரைவிங் லைசன்ஸ் நம்பர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.
- அதற்கு அடுத்து கொடுக்கப்பட்டுள்ள “கேப்சாவை” டைப் செய்யவும் .
- பிறகு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரி பார்த்து “ப்ரொசிட்” என்பதை கிளிக் செய்யவும் .
- அதன் பின் “டிஎல் ரினிவல்” சேவையை கிளிக் செய்து ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதன்பின் கேட்கப்படும் ஆவணங்கள் ஒவ்வொன்றாக பதிவேற்றி “சப்மிட்” என்பதை கிளிக் செய்தால் எண்ணுடன் ஒப்புகை ரசீது அனுப்பப்படும். இதை பதிவிறக்கம் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வழங்க வேண்டும். பிறகு உங்கள் ஆவணங்கள் சார்பாக புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் தபால் வழியாக உங்கள் முகவரிக்கு வந்தடையும்.