நமது தலை முதல் உடலில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் மாபெரும் மருத்துவ குணம் நிறைந்த ஒரு பொருள்தான் நமது சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயம். இதனை வைத்து எண்ணெய் தயாரிப்பது எவ்வாறு என்றும், அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இப்பதிவில் காண்போம் வாருங்கள்.
அரைக்கப் வெந்தயம் ஒரு கண்ணாடி பாட்டிலில் போடவும். இதில் உங்களுக்கு விருப்பமான எண்ணெயை ஊற்றி வெந்தயத்தை மூழ்கடித்து அதன் மீது ஒன்றரை அங்குலம் எண்ணெய் இருக்க வேண்டும்.
பின்னர் பாட்டிலின் மூடியை இறுக்கமாக மூடி வைத்து குறைந்தது நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை அப்படியே வைத்திருக்க வேண்டும். வெந்தயம் மற்றும் எண்ணெய் கலக்க ஒரு நாளைக்கு ஒரு முறை பாட்டிலை குலுக்கி வைக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்ய வேண்டும். ஆறு வாரங்களுக்கு பிறகு பருத்தி துணி அல்லது வடிகட்டி பயன்படுத்தி இந்த எண்ணெயை வடிகட்டிக் கொள்ளவும்.
எண்ணெய் நிறம் சற்று மாறி இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். இந்த எண்ணெய் சேமித்து வைத்து குறைந்தது ஒரு மாதம் ஆவது பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை குறைந்தது இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து தடவி வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.