
சுண்டைக்காயில் வத்தல் குழம்பு செய்து சாப்பிட்டால் இன்னொரு முறை சாப்பிட தூண்டும் நமது நாக்கு…
சுண்டைக்காய் வத்தல் குழம்பு செய்வதற்கு முதலில் தேவையான பொருட்கள், முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் அதில் சுண்டக்காயை போட்டு பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும் பின் அதே கடாயில் சற்று அதிகமான அளவு நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும் பிறகு அதில் வெட்டிய வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும், பின்பு அதில் மிளகாய் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் மற்றும் புளி தண்ணீரை விட்டு சிறிது உப்பை சேர்த்து நன்கு கொதிக்க விடவும் குழம்பு சற்று கெட்டியானதும் அதில் பொரித்து வைத்துள்ள சுண்டைக்காயை போட்டு ஒரு கொதி விட்டு இறக்கி அதில் சிறிது நல்ல எண்ணையை ஊற்றி மூடி வைக்கவும் இப்போது சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி, மேலும் சுண்டைக்காய் வத்தல் குழம்பு சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு தேவையான புரதம் கால்சியம் இரும்புச்சத்து அதிகம் கிடைக்கும் அதனால் உடல் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு தருகிறது சுண்டைக்காய்..!!