உங்களுக்கு நீண்ட நாட்கள் வாழ ஆசையாக இருக்கிறதா..!! 115 வயது பெண்மணி கூறுவதை கேளுங்கள்..!!

நம் அனைவருக்கும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருக்கும். அப்படி வாழ நீண்ட நாட்கள் வாழும் நபர்களிடம் அறிவுரை கேட்பது மிகவும் அவசியம். அப்படி என்ற 115 வயது பிரிட்டிஷ் பெண்மணி நீண்ட காலம் வாழ என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார் என்று பார்க்கலாம்.

இனா கணபரோ புதன்கிழமை அன்று 116 வயதில் உயிரிழந்தார். இதனை நாட்கள் அவர் உயிர்வாழ என்னென்ன செய்தார் என்று அவர் கூறியுள்ளார். அவர் யாருடனும் ஒருபோதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில்லை என்று கூறியுள்ளார். அவருக்கு என்ன பிடிக்கிறதோ அதையே கடைசி வரை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். பயணம் செய்வதில் திறமை மற்றும் ஆர்வம் இவரிடம் அதிகமாகவே இருக்கிறது.

அவர் எப்போதும் தனது பிறந்த நாளை தனக்கு பிரியமான விளையாட்டு கிளப் இன்டர்நேஷனல் போர்டோ அலெகிரேவின் கால்பந்து அணி அரங்கத்தின் வடிவத்தில் செய்யப்பட்டு கேக்குகளை வெட்டி கொண்டாடுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருடன் எட்டு பேர் உடன் பிறந்துள்ளனர். இந்தப் பெண்மணி தான் இளையவர். ஆகஸ்ட் 21 1909 அன்று இங்கிலாந்தின் தெற்கில் உள்ள சிப்டன் பெல்லிங்கர் கிராமத்தில் இவர் பிறந்திருக்கிறார்.

எப்போதும் வீணாக நேரத்தை இவர் செலவிட மாட்டாராம். உடலுக்கு உடற்பயிற்சி செய்வது இவரது வழக்கமாகும். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதுமட்டுமில்லாமல் உலகில் மிக வயதான நபரில் ஒருவராகவும் இவர் இருக்கிறார்.

Read Previous

இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் 6300 காலிப்பணியிடங்களுடன் வேலைவாய்ப்பு..!! ரூ.2,15,900/- வரை மாத ஊதியத்துடன் அடித்த ஜாக்பாட்..!!

Read Next

உங்கள் உடல் எடையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!! அசத்தலான டிப்ஸ் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular