உங்களுக்கு பிடிவாதக்கார மனைவியா..!! நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி..!!

உங்களுக்கு பிடிவாதக்கார மனைவியா..!

 

அப்படின்னா கைய குடுங்க…!

நீங்கதான் அதிஷ்டசாலி…?

 

பொதுவாக பிடிவாத குணமுடைய பெண் மனைவியாக அமைந்தால் வாழ்க்கை

மிகவும் மோசமாக ஆகிவிடும்

என்று சில ஆண்கள் கருதுகிறார்கள்.

 

ஆனால் அது உண்மை இல்லை…

 

கோபம் உள்ள இடத்தில் தான்

குணம் இருக்கும். அது போல

பிடிவாத குணம் உடைய பெண்களிடம் தான்

சிறந்த மனைவியாக திகழும் தன்மை இருக்கிறது.

 

அவர்கள் பிடிவாதம் பொருட்களை

வாங்குவதில் மட்டும் இருக்காது,

 

வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும்

என்ற எண்ணமும் அவர்களிடம் இருக்கும்.

 

இல்லத்தரசிக்கு தேவையான அனைத்து

குணாதிசயங்களும் பிடிவாத பெண்களிடம் இருக்கும்.

 

தனக்கு என்ன வேண்டும் என்பதில்

தீவிரமாக இருக்கும் பெண்கள்,

வேண்டாதவை மீது ஆசைப்படமாட்டார்கள்.

 

அதே போன்று வேண்டுவதையும்

விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

 

ஒரு விஷயத்தின் மீது வைக்கும்

அவர்கள் காதல் மிகவும் அழகாகவும்,

நேர்மையாகவும் இருக்கும்.

 

பிடிவாத குணமுடைய பெண்கள்

அழுதாலும், கோபப்பட்டாலும்,

அன்பு காட்டினாலும் முழு மனதுடன்

வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர்கள்.

 

நீங்களே சோர்வுற்று நின்றாலும்,

உங்களை பிடிவாதமாக அச்செயலில்

ஈடுபட்டு உங்களை வெற்றி பெற வைப்பார்கள்.

 

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும்,

அதை முகத்திற்கு நேராக பேசிவிடுவார்கள்,

 

இதன் காரணமாக சண்டை எழலாம்,

ஆனால் அது சுமூகமாக முடிந்துவிடும்.

தொடர்ந்து கொண்டே இருக்காது.

 

சுவாரஸ்யமானவர்கள் பிடிவாத குணம்

இருப்பினும் கூட, சின்னச்சின்ன சண்டைகள்,

சச்சரவுகள், கடுமையான நேரத்தில்

கவலைகள் மறக்க செய்யும்.

 

இவர்களது லூட்டிகள் சற்றே

சுவாரஸ்யமானதாகவே இருக்கும்.

 

பிடிவாதம் இருக்கும் அதே அளவிற்கு

இவர்களிடம் அனுதாபமும் இருக்கும்.

 

சூழ்நிலை புரிந்து கொண்டு அதற்கேற்ப

தங்களது ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்பை

அதிகரித்து கொள்வார்கள்.

 

பிடிவாத குணமுடையவர்கள் மத்தியில்

தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.

 

அதன் காரணமாக உங்களுக்கும்

தன்னம்பிக்கை அளிக்கும் வகையில்

நடந்து கொள்வார்கள்.

 

இவர்களது பேரார்வம் வேலை,

மற்றும் இல்வாழ்க்கை விஷயங்களிலும்

கூட தொடரும்.

 

இதனால், எந்த திட்டத்தை

நிறைவேற்றுவதில், வீடு, பொருட்கள் ,

சேமிப்பு போன்றவற்றிலும் கூட இவர்கள்

சீராக நடந்து கொள்வார்கள்…..

 

இப்ப சொல்லுங்க பிடிவாத குணம்

உடைய மனைவி வரமே!

Read Previous

படித்ததில் பிடித்தது: சிலரின் வரவு நம் வாழ்வை அர்த்தப்படுத்தும்..!!

Read Next

ரூ.47,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular