இப்போது இருக்கும் காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை தான் முடி கொட்டுதல். இது வயது வரம்பு இன்றி அனைவரிடமும் காணப்படுகிறது. இதற்கு காரணம் நமது வயது மரபணு மாற்றம் வாழ்க்கை முறை என பல இருக்கிறது. இதிலிருந்து விடுபட இயற்கை முறை வைத்தியங்களும் ஆங்கில முறை வைத்தியங்களும் பல இருக்கின்றன.
ஆனால் அதிலிருந்து பலன்கள் எப்போதும் கிடைக்கிறதா என்று கேட்டால், அது நிச்சயமாக கிடையாது. எப்படி நமது உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் உணவு வழி வகிக்கிறதோ அதேபோல நமது முடியின் வளர்ச்சிக்கும், அந்த உணவுதான் வழி வகிக்கிறது. ஒரு நாளைக்கு ஒன்று முதல் நூறு முடிகள் கொட்டுவது சாதாரணமான விஷயம்தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நாம் குளித்த பின்னும் அல்லது குளிக்கும்போதும் முடி உதிர்வது இயல்பானதாகும். ஆண்களை விட பெண்களுக்கு முடி உதிர்வு அதிகமாகத்தான் இருக்கும். பெண்களுக்கு கர்ப்ப காலம் மாதவிடாய் பிசிஓஎஸ் போன்ற காலத்திலும் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். தலையில் வேர்க்காலில் இருந்து பின் தலைவரை விரலை விடும்போது நமது கைகளில் எவ்வளவு முடி இருக்கிறதோ அதுவே நமது முடி உதிரும் தன்மையாக கருதப்படுகிறது.
அதிக அளவு நமது கைகளில் முடி இருக்கும் பட்சத்தில் அதற்கான நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. படுக்கை தலையணையில் முடி உதிர்வது சாதாரணம் என்றாலும் மற்ற நாட்களில் அதிகமாக இருந்தால் மருத்துவரை சந்திக்க வேண்டும்.




