நமது இந்தியாவில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். ஒரு ஆதார் எண்ணை வைத்து நம் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ள முடியும். சில இடங்களில் மோசடி செய்வதற்காக போலியான ஆதார்எண்ணை உருவாக்கி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அத்தகைய காரணத்திற்காகவே மிகவும் சுலபமாக போலியான ஆதார் அட்டையை கண்டு பிடிப்பது எப்படி என்பதை பற்றி இந்த செய்தியில் காண போகிறோம்.
போலியான ஆதார் எண் கண்டுபிடிப்பது எப்படி:
- ஒரு நபரின் ஆதார் எண் உண்மையானதா பொய்யானதா என்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் மொபைலில் “myaadhar” என்ற செயலியை (app ) டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.இந்த செயலி UIDAIயால் உருவாக்கப்பட்ட ஒரு செயலி ஆகும்.
- “MYAADHAR ” என்ற செயலியை டவுன்லோட் செய்த உடன், ஆதார் எண்ணை சரி பார்ப்பதற்கான 2 விருப்பங்களை காண்போம். அதாவது QR மற்றும் ஆதார் எண்ணை என்டர் செய்தல் ஆகிய இரண்டு விருப்பங்கள் இருக்கும்.
- எளிமையான முறையில் சரிபார்க்க வேண்டும் என்றால் QR குறியீடை வைத்து சரிபார்க்கலாம். அதாவது, MYAADHAR செயலியில் இருக்கும் QR படிவத்திற்கு சென்று ஆதார் அட்டையில் இருக்கும் QR குறியீட்டை SCAN செய்தால் போதும் ஆதார் ஆவணம் உண்மையானதா, போலியானதா என்று சுலபமாக கண்டுபிடித்து கொள்ளலாம்.
ஒரு மொபைல் இருந்தால் போதும் உங்களுடைய ஆதார் எண் உண்மையா அல்லது போலியா என்று தெரிந்து கொள்ளலாம்.