
தற்பொழுது உள்ள காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அது மட்டும் இன்றி பணி புரியும் இடங்களில் கணினி போன்றவற்றை பயன்படுத்தும் நிலை இருப்பதால் அவர்களின் கண்களில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த நிலையில் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து இப்பதிவில் தெளிவாய் காண்போம்.
- தினமும் 50 கிராம் அளவிற்கு மாம்பழம் அல்லது பப்பாளி சாப்பிட்டு வருவதால் பார்வை திறன் மேம்படுகிறது.
- அரைக்கீரை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடைகிறது.
- இதே போல் பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக்கீரை சாப்பிட்டாலும் பார்வை திறன் மேம்படுகிறது.
- தினம் தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வருவதால் கண் தொடர்பான பிரச்சனைகள் வராது .
- கருவேப்பிலை, கேரட் உள்ளிட்டவற்றை அதிக அளவில் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் கண்களை பாதுகாக்க முடியும்.