உங்கள் காதில் தண்ணீர் புகுந்து விட்டதா..? அப்போ உடனடியாக இதை செய்யுங்கள்..!!

நாம் குளிக்கும் போது அல்லது மழையில் நினையும்போதோ சில நேரங்களில் நமது காதுக்குள் தண்ணீர் சென்று விட வாய்ப்பு உள்ளது. அப்படி நாம் காதுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் அதை வெளியேற்ற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து காண்போம்.

முதலில் தலையை சாய்த்து நீரை வெளியேற்ற முயற்சி செய்ய வேண்டும். எந்த காதில் தண்ணீர் புகுந்ததோ அந்த பக்கம் கீழாக தலையை சாய்க்க வேண்டும். பிறகு ஒரு மெல்லிய துணியை காதின் துளையில் துடைக்க வேண்டும். இதை தொடர்ந்து ஒரு ஹேர் டிரையர் போன்ற நீரை உணர்த்தும் கருவியை குறைந்த வெப்ப நிலையில் வைத்து காதின் துளைகளை சூடாக்க வேண்டும்.

இந்த முதலுதவி மூலம் காதல் தண்ணீர் புகுந்து சரியாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை சந்திக்கவும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களாவே காதுக்குள் எந்த ஒரு சொட்டு மருந்துயோ, எண்ணெயையோ விட வேண்டாம் .ஏனெனில் அவை காதுகுள் ஏதேனும் தொற்று ஏற்பட வழிவகை செய்துவிடும். எப்போதும் காதுகளை சுத்தம் செய்ய கூர்மையான ஊசி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

மேலும் காதுகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் கூடாது. குளிக்கும்போது காதுகளில் தண்ணீர் செல்வதை தடுக்க காது அடைப்புகளை பயன்படுத்திக் கொண்டு குளிக்க வேண்டும். மேலும் எப்போதும் காதுகளை ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக வைத்திருக்க வேண்டும் இதற்கு ஹீட்டிங் பேடையும் உபயோகம் படுத்தலாம்.

Read Previous

27 நட்சத்திரக்காரர்களும் எந்த தெய்வங்களை வழங்க வேண்டும் என்பது தெரியுமா? முழு விவரம் இதோ உங்களுக்காக..!!

Read Next

செங்கல்பட்டு அருகே அரசு பள்ளி மாணவர்கள் இருவர் கடத்தல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular