
பல பேருக்கு கொய்யாப்பழம் மிகவும் பிடிக்கும். இதில் வைட்டமின் ஏ வைட்டமின் சி வைட்டமின் பி6 கால்சியம் இரும்புச்சத்து பொட்டாசியம் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனாலும் இந்த கொய்யா பழத்தை சில குழந்தைகள் சாப்பிட அடம்பித்தும் வருகின்றனர். ஆகையால் குழந்தைகள் சாப்பிடும் வகையில் இந்த பழத்தை ஜூஸ் போட்டு எப்படி கொடுப்பது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள் :
பால் – அரை கப்
கொய்யாப்பழம் – 2
பாதாம் – 3
நாட்டு சர்க்கரை – 2 கரண்டி
கொய்யா பழத்தை சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு ஜாரில் அதை போட்டு நாட்டு சக்கரை மற்றும் பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பாதாமை சிறிது நொறுக்கி அதில் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கவும். அவ்வளவுதான் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கொய்யாப்பழ ஜூஸ் தயார்.