உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ள அவரைக்காய்..!!

அவரையில் பல வகைகள் உண்டு. அவற்றுள் சிலவாக கோழி அவரை, சப்பரத்தவரை, கொத்தவரை, சீனி அவரை, காட்டவரை, பூனைக்கால் அவரை, சீமை அவரை, முருக்கவரை, வாளவரை, பேயவரை, ஆட்டுக் கொம்பு அவரை, வெள்ளவரை ஆகியவற்றை கூறலாம்.

அவரைக்காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கின்றன. இது உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது.

உடலுக்கு “கால்சியம்” சக்தி மிகவும் அவசியமாகும். இந்த கால்சியம் சக்தி தான் உடலின் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மைக்கு அவசியமானதாக இருக்கிறது.

அவரையில் உடலுக்கு ஊட்டச்சத்தும் மருந்தும் ஆகும் பொருட்கள் மலிந்துள்ளன. அவரையில் “போலேட்” என்னும் விட்டமின் சத்து மிகுதியாக உள்ளது. ஒரு கப் அவரையில் ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்குத் தேவையான “போலேட்” விட்டமின் சத்தில் 44% அளவு உள்ளது.

இந்த “போலேட்” தாவர ரசாயன மாற்றங்களுக்கு உறுதுணையாய் நின்று மரபு அணுக்களின் உற்பத்திக்கும், செல்களின் வளர்ச்சிக்கும், அமினோ ஆசிட்கள் உருவாவதற்கும் உதவுகிறது. மேலும் கர்ப்பிணிகளின் வயிற்றில் வளருகின்ற குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்தினைத் தருவதாகவும் “போலேட்” உதவுகின்றன.

அவரையில் உள்ள இரும்புச் சத்து ரத்த சிவப்பு அணுக்கள் உருவாக உதவுகின்றது. சர்க்கரை நோயாளிகளுக்கு உரித்தான மலச்சிக்கல் நோய்க்கும் இது மருந்தாகிறது.

அவரையில் பொதிந்துள்ள புரதச்சத்தும், நார்ச்சத்தும் ஒருங்கே சேர்ந்து உடல் எடை குறைவதற்கு உதவுகின்றது. இது உடலில் சேர்ந்த கொழுப்புச் சத்தை வெளியேற்றவும் வகை செய்கிறது. இதனால் இதய நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் இதயம் சீராகச் செயல்படுவதற்கும் ஏதுவாகின்றது.

Read Previous

கருப்பு நிற ட்ரான்ஸ்பரன்ட் சேலையில் மயக்கும் ரச்சிதா மகாலட்சுமி..!!

Read Next

பாலியல் தொல்லையில் நடிகர் சங்க தலைவர் மோகன்லால் ராஜினாமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular