துளசியை நாம் தினமும் சாப்பிடுவதின் மூலம் நம் உடலில் மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் போன்றவை ஏற்படாது.
தேவையான பொருட்கள்:
- துளசி – 1 கப்
- புதினா – ½ கப்
- புளி – எலுமிச்சை அளவு
- பச்சைமிளகாய் – 2
- காய்ந்த மிளகாய் – 2
- மிளகு – சிறிதளவு
- உளுத்தம்பருப்பு – ½ ஸ்பூன்
- பூண்டு – 5 பல்
- பாதம் பருப்பு – 5
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- முதிலில் துளசியையும் புதினாவையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உளுத்தம்பருப்பு ,பச்சை மிளகாய்,காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் பூண்டு ,மிளகு,புளி,பாதாம் சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள புதினாவை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் அடுப்பை அனைத்து வதக்கிய பொருட்கள் சிறிது ஆறியவுடன் அதில் துளசியை சேர்த்து வதக்கவும்.
- பின் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்தால் ஆரோக்கியம் தரும் துளசி துவையல் ரெடி.