இந்த நவீன காலகட்டத்தில் சத்தான உணவு முறைகளையும் நேரத்திற்கு கரெக்டாக உணவு எடுத்துக் கொள்ளாத காரணத்தாலும் பலருக்கு உடல் எடை அதிகமாகி சிரமப்படுகிறார்கள். இந்த வகையில் உடல் எடையை குறைப்பதற்கு ஏராளமான வழிகள் இருந்தாலும் அதை தொடர்ந்து பின்பற்ற முடியுமா என்பது கேள்வி குறிதான். அந்த வகையில் வீட்டிலேயே தினமும் ஃபாலோ பண்ண சுலபமாக உள்ள இந்த டீயை குடித்து உடல் எடையை குறைக்கலாம். ஆம் உடல் எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி டீ.. இதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பட்டை – 2
இஞ்சி – சிறிய துண்டு
பிளாக் டீ – 1 ஸ்பூன்
எலுமிச்சை – இரண்டு சிறிய துண்டுகள்
புதினா – 4 இலைகள்
தேன் – தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் பட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து இரண்டு நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு அதில் ஒரு ஸ்பூன் பிளாக் டீயை சேர்த்து அடுப்பை அணைத்து வடிகட்டி அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து சிறிதளவு தேன் சேர்த்து குடித்து வர உடல் எடையை கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை நாம் கண்கூட பார்க்கலாம்.




