
உடல் சூட்டை சட்டென குறைக்கும் வெந்தயக் களி..!! செய்முறை விளக்கம்..!!
தேவையான பொருட்கள்:
வெந்தய மாவு – 500கி, பச்சரிசி மாவு – 200கி, வெல்லம் அல்லது கருப்பட்டி – 100கி, சுக்குத்தூள் – அரை ஸ்பூன், ஏலக்காய் பொடி – சிறிதளவு, நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி. அரிசி மாவு.
செய்முறை விளக்கம்:
வெந்தய மாவை தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். பின்னர் கரைத்து வைத்துள்ள மாவு, வெல்லப்பாகு ஆகியவற்றை அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் சமயத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, சுக்குத்தூள், ஏலக்காய் தூள் சேர்த்து சாப்பிடவும். வயதுக்கு வந்த பெண்கள், கருத்தரித்த பெண்கள், மாதவிடாய் கோளாறு உள்ளவர்கள், தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ளவர்களுக்கு மாமருந்தாக இருக்கிறது.