
உணவில் தினை, சோளம், கம்பு, சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகளை குறித்து பார்க்கலாம்.
நம் உணவில் திணை,கம்பு,சோளம் சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. இதில் நார்ச்சத்து இரும்புச்சத்து தாதுக்கள் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதேபோல் தினை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் சில சமயம் இது செரிமான பிரச்சனைகளையும் வரவழைக்கும். மேலும் தினையை முளைகட்டி சாப்பிட்டால் நல்லது.
கம்பு குளிர்காலத்தில் சாப்பிட்டால் நல்லது. இது கோடை காலத்தில் மோருடன் கம்பு மாவு சேர்த்து பானமாக தயாரித்து குடித்து வரலாம். இது உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.
சோளத்தில் புரதம் இரும்பு சத்து நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் கரைத்து குடல் மற்றும் இதய ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது.
எனவே தினை, கம்பு, சோளம் போன்ற ஆரோக்கியம் இருந்த உணவுகளை உணவில் சேர்த்து உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.