உலகம் எங்கும் சிவன் பக்தர்கள் நிறைந்தே காணப்படுகின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் சிவனை வணங்காதவர்கள் யாரும் இல்லை..
சிவன் மீது பற்று கொண்டவனை சிவன் ஒரு காலமும் சோதிப்பதில்லை சோதனைகள் தந்தாலும் அவனை கைவிடுவதில்லை என்று ஐதீகம் கூறுகிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் சிவனுக்கு என முதன் முதலாக உருவாக்கப்பட்ட கோவில் ராமநாதபுரத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உத்திரகோசமங்கை என்னும் இடத்தில் உள்ளது, இங்கு அமைந்துள்ள மங்கள நாதேஸ்வரர் கோயில் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் என நம்பப்படுகிறது ஐதீகம் கூறுகிறது, இந்த திருத்தலமானது திருவாசகத்தில் மாணிக்கவாசகரால் பாடுபட்ட கோவிலாகவும் விளங்குகிறது, இந்தக் கோவிலில் மாணிக்கவாசகர் தல 500 பாடல்களை பாடியுள்ளார், இந்த ஆலயத்தில் உள்ள மங்கள நாதஸ்வரருக்கு தாழம்பூ வைத்து வழங்குவதனால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி நமக்கு நல்லது நடக்கும் என்று இங்கு நம்பப்படுகிறது, இந்தக் கோவிலை நம் வாழும் போதே ஒரு முறையாவது சென்று வர வேண்டிய இடமாக தமிழகத்தில் விளங்குகிறது, இங்கு தரிசனம் பெற்று சென்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சிறப்பு பெற்றதாக கூறுகின்றனர்..!!