
காய்ந்த திராட்சை உடலுக்கு மிக நல்லது. ஒரு கைப்பிடி காய்ந்த திராட்சையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். செரிமானம் அதிகரிக்கும். நரம்புகள் பலமாகும். கர்ப்பம் தரிக்காத பெண்கள் ஊற வைத்த உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருப்பை குறைபாடுகள் நீங்கும். சிறு குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால், உலர் திராட்சையை ஊறவைத்து, அதை நசுக்கி, திராட்சை ஊறிய நீருடன் குடிக்க வைத்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.