AI தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நிறைய கம்பெனிகள் ஊழியர்களை பணி நீக்கம் செய்யத் தொடங்கியது. தற்போது, இந்த பணி நீக்கம் குறித்த கணக்கீட்டை layoffs.fyi- தன் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பல முன்னணி நிறுவனங்கள் மட்டும் 1.30 லட்சத்திற்கும் மேலான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் மட்டும் இந்த ஆண்டு 32 பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் 8000 பேரை பணியில் இருந்து நீக்கி இருக்கின்றனர்.
இதற்கு காரணம், அனைத்து நிறுவனங்களும் செலவை குறைப்பதற்காக, AI – களில் முதலீடு செய்கிறார்கள் என்று தகவல் தெரியவந்துள்ளது. மேலும், நாளுக்கு நாள் புதிய AI Tool வசதியை உருவாக்கிக் கொண்டு இருப்பதால், வரும் காலங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை பெறுவது மிக கடினமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.