உலக அளவில் அண்மைக்காலமாக AI போன்ற தொழில்நுட்ப கருவிகள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. தற்போது தொழில்நுட்பத் துறையில் இந்த ஏஐ கருவிகள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கவனம் செலுத்த இருப்பதால் ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் காக்னிசன்ட் நிறுவனம் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்யாமல் அவர்களின் சம்பளத்தை குறைத்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் தொடக்க நிலை ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய். 2.5 லட்சம் என்ற வருடாந்திர
வருமானத் தொகுப்பை வழங்கி வருகிறது.தற்போது இந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள் இது டீ குடிக்க கூட பத்தாதே என பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .