
இன்றைய காலங்களில் மனிதர்கள் இயங்குவதும் உயிருடன் இருப்பதும் காதலால் தானே, காதல் என்பது ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றி அவனுக்குள் புது உலகையே அறிமுகம் செய்கிறது..
அவளின் முதல் பார்வையில் மோகம் கொண்டு இடைப்பார்வையில் நீச்சம் பெற்று கடைசி பார்வையில் அவள் தேவைகளை பூர்த்தி செய்து அவளுக்காக வாழ்வது தானே காதல், காதல் எவற்றோடும் ஒப்பிடாது அது தனி வரையறை கொண்டது அதற்குள் இரண்டு இதயங்கள் சேர்ந்து ஒரு ஓசையாக மாறும், அப்படிப்பட்ட காதலை உணரும் போது உடலில் உள்ள எத்தனையோ பிரச்சனைகள் நீங்கி உடல் ஆரோக்கியமாகவும் மனம் மகிழ்ச்சியாகவும் இருக்கும், சில காதல்கள் சேர்வதே இல்லை ஆனால் அந்த காதல் பிரிந்ததே இல்லை நினைவுகளால் சேர்ந்தும் பார்வையால் பிரிந்தும் வார்த்தையால் ஒருவரை ஒருவர் வாழ்த்தியும் தூரமின்றி ரசிக்கும், எத்தனையோ பாடலாசிரியர் காதலை பற்றி அழகாக வர்ணித்து பாடியதுண்டு அப்படி இருக்கும் பட்சத்தில் உங்கள் காதலர்களோடு செல்லச் சண்டையிட்டு, ஆழமாய் அன்பிட்டு, அடிக்கடி பாசத்தை பரிசிட்டு வாழ்ந்து பாருங்கள் உங்கள் காதல் இந்த அத்தியாயத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு அத்தியாயத்திலும் அழகாய் தொடங்கும், இந்த வரிகள் பிடித்திருந்தால் உங்கள் காதலர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்..!!