
எது கிராமம்..?? எது நகரம்..?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை கண்டிப்பாக படிக்கவும்..!!
எது கிராமம் எது நகரம் என்று தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படித்தால் மட்டும் போதும். அதாவது பச்சை குத்தினால் அது கிராமம் டாட்டூ போட்டுக் கொண்டால் அதுதான் நகரம். மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம். மெஹந்தி போட்டால் நகரம். கையில் மஞ்சப்பை வைத்து இருந்தால் கிராமம். பாலிதீன் பை வைத்து இருந்தால் நகரம். கணவன் தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் அது கிராமம். மனைவி அவள் நண்பர்களை கணவனுக்கு அறிமுகம் செய்தால் அது நகரம். கிழிந்த ஆடையை தைத்து போட்டால் கிராமம். நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம். உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம். உடம்பை குறைக்க மிதிவண்டி இருந்தால் அது நகரம். இவ்வாறு சராசரியாக நம் வாழ்வில் உள்ளவற்றை வைத்தே எது கிராமம் எது நகரம் என்று தெரிந்து கொள்ளலாம்.