எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் வாங்க தெரிந்து கொள்ளலாம்..!!

இன்றைய காலகட்டங்களில் பலரும் இரவு நேரங்களில் தூங்காமல் இருப்பது அல்லது தூங்குவதையே வேலையாக வைத்திருப்பது என்பது உடலுக்கு கேடு தான், இப்படி இருக்கும் பட்சத்தில் எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியமே.

தூக்கம் என்பது நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று தூங்கி எழுந்த பிறகு உடலும் மனமும் புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும், ஒரு மனிதனுக்கு தேவையான அளவு தூக்கமின்றி இருப்பதனால் உடல் சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, மற்றும் உடலில் செரிமான பிரச்சனைகள் என தோன்றும், ஒரு நபர் தேவையான அளவு தூக்கத்தை விட ஒரு மணி நேரம் குறைவாக தூங்கினால் கூட அதனை மீட்டெடுக்க 4 நாட்கள் ஆகும், மேலும் அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பிறந்த 3 மாத குழந்தைக்கு 14 முதல் 17 மணி நேரம் உறக்கம் வேண்டும், 4 மாதம் முதல் 12 மாதம் வரை இருக்கும் குழந்தைகளுக்கு 12 முதல் 16 மணி நேரம் தூக்கம் வேண்டும்,1 முதல் 2 வயது உள்ள குழந்தைகளுக்கு 11 முதல் 14 மணி நேரம் உறக்க வேண்டும்,3 முதல் 5 வரை உள்ள குழந்தைகளுக்கு 10 நேரம் முதல் 13 மணி நேரம் தூக்கம் வேண்டும்,6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு 9 முதல் 12 மணி நேரம் உறக்க வேண்டும்,13 முதல் 17 வயது உள்ள குழந்தைகளுக்கு 8 முதல் 10 நேரம் தூக்கம் வேண்டும்,18 முதல் 60 வந்து வயது உள்ளவர்களுக்கு 7 மணி நேரம் கட்டாயம் உறங்க வேண்டும்,61 வயதை கடந்த முதியவர்கள் 9 மணி நேரம் நன்றாக தூங்கி எழ வேண்டும்..!!

Read Previous

Airtel family plans குடும்பமே பயன்பெறலாம்..!!

Read Next

தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் செய்தி அறிதல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular