இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின்சார நிறுவனமான என்டிபிசி லிமிடெட், 25 நிர்வாக பயிற்சியாளர் (நிதி) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. சிஏ அல்லது சிஎம்ஏ தேர்ச்சி பெற்றவர்கள், 27.1.2026 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ. 40,000. ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணம் ரூ.500, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. https://careers.ntpc.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.




