என்னது மகாராஜா பார்ட் 2 வருதா?.. இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்..!!

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து கடந்த ஆண்டு  வெளியான திரைப்படம் தான் “மகாராஜா”. இந்தப் படத்தில் அபிராமி, அனுராக் கஷ்யாப், சாச்சனா, திவ்ய பாரதி போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இது ஒரு பக்கம் இருக்க,  சமீபத்தில், இயக்குனர் நித்திலன் சாமிநாதன் விஜய் சேதுபதியிடம் ‘மகாராஜா 2’ படத்தின் கதையைச் சொன்னதாகவும், அவரும் கதைக்கு ஒப்புதல் அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நிதிலன் சுவாமிநாதன் இப்படத்தின் திரைக்கதை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மகாராஜா படமே பயங்கர ஹிட் அப்போ அதன் இரண்டாவது பாகம் அதை விட ஹிட் குடுக்குமோ ?? என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Read Previous

IDBI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! 650+ காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

முதுமை என்பது வரமா?.. சாபமா?.. படித்ததில் பிடித்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular