பொதுவாக நாம் உணவகங்களுக்கு சென்று பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக தற்போது பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவழைத்து சாப்பிடுகிறோம். ஆனால் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு கேட்டரிங் மூலம் ஆர்டர் செய்தோ, சமைத்தோ சாப்பிடுவோம். ஆனால், ஒரு ஜோடி தனது நிச்சயதார்த்தத்திற்கு தேவையான முழு சாப்படையும் ஸ்விக்கியில் ஆர்டர் செய்திருக்கின்றனர். இதை ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவர் அந்த மொத்த பார்சல்களையும் டேபிள் மீது அடுக்கி வைக்கும் காட்சி வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை ஸ்விக்கி நிறுவனமே பார்த்து தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளது. அந்த பதிவில், இந்த அளவுக்கு பெரிய ஆர்டர்களை இதுவரை யாரும் செய்தது இல்லை என்றும், மேலும் இவ்வாறு பெரிய அளவில் ஆர்டர் செய்வதால், உணவு டெலிவரி நிறுவனத்திற்கும், உணவகங்களுக்கும் மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என்று இந்த செயலை பாராட்டி பகிர்ந்துள்ளது.
no one has used our Crazy Deals better than these guys 😭😭 shaadi ka khana bhi humse mangwa lena 🥰 https://t.co/XIo2z2TnYX
— Swiggy Food (@Swiggy) August 4, 2024