ஒரு செயலை செய்வதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும் என்பதை உணர வைத்த பதிவு..!!

Oplus_131072

ஒரு செயலை செய்வதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும் என்பதை உணர வைத்த பதிவு..!!

நரி ஒன்று தாகத்தால் தவித்துக் கொண்டிருந்தது எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை என்ன செய்வது தண்ணீரை தேடி அலைந்தது. தூரத்தில் ஒரு கிணறு இருப்பதை அது பார்த்தது. கிணற்றிற்கு அருகே சென்று கிணற்றின் கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்தது. அதை கண்ட நரி வாளியில் தாவி ஏறிய அமர்ந்து உடனே வாளி விருவிரு என கிணற்றில் உள்ளே சென்றது. நரி வயிறு நிறைய தண்ணீரை குடித்தது தாகம் தணிந்த பின் மேலே பார்த்தது எப்படி வெளியேறுவது என்று யோசிக்க தொடங்கியது. மேலே இருந்து யாராவது வயிற்றை இழுத்தால் தானே என்னால் மேலே போக முடியும் என்ன செய்வது நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது. அந்த நேரம் பார்த்து கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது கிணற்றில் உள்ள எட்டிப் பார்த்தது. அங்கு நரி இருப்பதை கண்டது அடடா நரி ஐயா உள்ளே என்ன செய்கிறீர்கள் என கேட்டது. நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன் என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன் கோழி ஆடு எல்லாம் தருகிறார்கள் என்றது நரி. ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாலி சராசர வென்று கிணற்று  உள்ளே போயிட்டு அப்போது நரி அமர்ந்திருந்த வாலி மேலே வந்தது நரி மேலே வரும்போது பாதி வழியில் ஓனாயை பார்த்தது நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்கு போகிறேன் என்று கூறிக்கொண்டே மேலே சென்றது மேலே வந்ததும் கிணற்று சுவரின் மேலே தாவி குதித்து தப்பியது பாவம் ஓநாய். இதே மாதிரி தான் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் பலமுறை யோசிக்க வேண்டும்.

Read Previous

அப்பாவின் அருமை தெரியாதவர்கள் அப்பாவின் அருமை தெரிந்து கொள்ள இந்த பதிவை படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

வாய்வுத் தொல்லை பிரச்சினையிலிருந்து விடுபட கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular