ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை..!! ராணுவ வீரர் தலைமறைவு..!!
ஹரியானா மாநிலத்தில் தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேரை முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாராயன்கண் நகரை அடுத்த ராதர் கிராமத்தில் சொத்து தகராறில் 5 பேரை முன்னாள் ராணுவ வீரரான பூஷன் கொலை செய்துள்ளார். 2 ஏக்கர் நிலத்திற்க்காக, அவரது தாய், சகோதரன், அவரது மனைவி, மகன் மற்றும் மகளை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலைசெய்துள்ளார். இதனையடுத்து தலைமறைவான அவரை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர்.